Canada-EU summit will kick off formal talks on closer ties, says Mark Carney: கனடா - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, நெருக்கமான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை முறைப்படி துவங்க உதவும் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில், நாளையும் நாளை மறு நாளும், கனடா - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.
மொன்றியலில் நடைபெற உள்ள கனடா - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, அடுத்த ஆண்டுக்குள் ஆழமான கூட்டாண்மை குறித்த பேச்சுவார்த்தைகளை முறைப்படி துவங்க உதவும் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அந்த மாநாட்டின்போது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை கார்னி சந்திக்கும் நிலையில், அவர்கள் கூட்டணி தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள முறையான கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் துவக்கமாக இந்த மாநாடு அமையும் என்று கூறியுள்ளார் பிரதமர் கார்னி.
விடயம் என்னவென்றால், ட்ரம்ப் தொல்லை கொடுப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துள்ளார் கார்னி. ஆனால், கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் சரியான தன்மை, இருதரப்பு தலைவர்களுக்கே கூடத் தெளிவாகத் தெரியவில்லை.
செப்டம்பரில், இந்த புதிய முன்னேற்பாடு, கனடாவை 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பில் ஒரு ’இணை உறுப்பினராக’ ஆக்கக்கூடும் என்று வான் டெர் லேயன் கூறியிருந்தார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உண்மையில் இணை உறுப்பினர் என்ற நிலை இல்லை, அத்துடன், அந்தப் பதம் தொடர்பில் கனடா தரப்பில் சிலருக்கு உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


