TamilsGuide

ரிலீஸ் தேதியை உறுதி செய்தது நிறம் படக்குழு... 

முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி நடித்த ‘நிறம்’ படம் நவம்பர் 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் டி. இமான் இசையமைப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘நிறம்’. டி. இமான் இசையமைத்துள்ள இப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர், விறுவிறுப்பான காட்சிகளாலும் சுவாரஸ்யமான பின்னணி இசையாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், ‘நிறம்’ படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘நிறம்’ படம் நவம்பர் மாதம் 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தனுஷின் 'ஓம்' மற்றும் கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்திரி' ஆகிய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு 'நிறம்' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave a comment

Comment