வெனிசுவேலா நாட்டுடன் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டின் எண்ணெய் வளம் அமெரிக்காவுக்குப் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸின் கார்பஸ் கிறிஸ்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெனிசுவேலாவில் டெக்சாஸ் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களால் பில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் மிக எளிதாகக் காணப்படுவதைக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் அது அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறக்கூடும் எனவும், அங்கு ஜனாதிபதிக்கு பதிலாக ஆளுநருக்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா உலகிலேயே அதிகளவு எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள நாடாக மாறுவதாகவும், இதன் மூலம் நுகர்வோருக்கான எரிபொருள் (பெற்றோல், டீசல்) விலைகள் வெகுவாகக் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெனிசுவேலா விவகாரத்தில் அமெரிக்க இராணுவ வீரர்களின் பங்களிப்பையும், அவர்களின் துணிச்சலையும் அவர் பாராட்டினார்.


