TamilsGuide

அமெரிக்காவில் வரலாற்று சாதனை படைத்த ஜெயிலர் 2, நம்பர் 1 வசூல் 

தமிழ் சினிமாவில் என்றைக்கும் எப்போதும் ரஜினிகாந்த் தான் நம்பர் 1 என நிரூபித்து வருகிறார்.

கடந்த் 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ரஜினி தான் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த் என்றைக்கும் தன் நம்பர் 1 இடத்தை யாருக்காகவும் விட்டு கொடுத்தது இல்லை, அதை ஜெய்லர் 2 மூலம் மீண்டும் நிரூபித்துவிட்டார்.

நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இதுநாள் வரை ஜெய்லர் முதல் பாகம் தான் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தது, சுமார் 7.25 மில்லியன் டாலர் வசூல் செய்து ஜெய்லர் முதல் பாகம் இருக்க, அந்த வசூலை ஜெய்லர் 2 முறியடித்துள்ளது.

ஆம், ஜெய்லர் 2 நார்த் அமெரிக்காவில் 7.3 மில்லியன் டாலர் வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக ஜெய்லர் 2 இடம்பிடித்துள்ளது.

மேலும் முதல் 10 இடங்களில் நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 7 இடங்கள் வரை ரஜினி படங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment