ஈரான் தலைநகர் தெஹ்ரானில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹவுதிகளின் ராணுவ மிரட்டலுக்கு தாங்கள் அடிபணியவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமான பால் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்று நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.
மேலும் ஹவுதிகள், பாப் அல் மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஏமனுக்கு ஆதவராக சவுதி அரேபியா போரில் உதவி வருகிறது. இதையடுத்து சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீதும், நகரங்கள் மீதும் ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்குமாறு சுமார் 9,500 கோடி ரூபாய் நிதியை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.
இந்த சமாதான பேச்சுவார்த்தையை ஈரான் அரசாங்கத்துடன் இணைந்து பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிர், சவுதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் துருக்கி உளவுத்துறை தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோர்கள் ஈரானுக்கு சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான், ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பொது செயலாளர் மொஹ்சென் ரெஸாயி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ராணுவம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வந்தபோதிலும், சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.
இந்த நிலையில் ஹவுதிகளின் ராணுவ மிரட்டலுக்கு சவுதி அரேபியா அடிபணிந்து விட்டதாக வந்த செய்தியை சவுதி அரேபியா மறுத்துள்ளது.
மேலும் ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நகரங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும், அதுவரையில் இந்த 9,500 கோடி ரூபாய் நிதியானது வழங்கப்படமாட்டாது என்றும் சவுதி தெரிவித்துள்ளது.


