TamilsGuide

திஷா பதானி குடிக்கும் தண்ணீர் விலை ரூ.28 ஆயிரம்

திஷா பதானி அருந்தும் பிளிங் எச்-20 குடிநீர் உலகின் விலையுயர்ந்த குடிநீராகும். 750 மி.லி. பாட்டிலின் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த நீர் 9 சுத்திகரிப்பு நிலைகளை கடந்து, சுவரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் திஷாபதானி. பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் திஷா பதானி உடற்கட்டு கோப்பு விஷயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவரது உடற்தகுதி மற்றும் அழகு ரகசியத்தை அறிவதற்கு பலரும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் திஷா பதானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகிறது. அவர் படப்பிடிப்பு தளத்திற்கோ, பொது நிகழ்ச்சிகளுக்கோ சென்றால் ஒரு பிரத்யேக கண்ணாடி பாட்டில் அவர் கையில் இருந்து கொண்டிருக்கும். திஷா குடித்து வரும் தண்ணீர் சாதாரணமானது அல்ல. உலகின் மிக விலை உயர்ந்த பிரத்யேகமான குடிநீர் ஆகும். திஷா பதானி வாரத்திற்கு சுமார் 5 முறை பிளிங் எச் 20 குடிநீரை அருந்துகிறார். இந்த சிறப்பு குடிநீரின் விலை 750 மி.லி. பாட்டில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

விராட் கோலியும், திஷா பதானி அருந்தும் விலை உயர்ந்த குடிநீரை போல்தான் அருந்துகிறார். பிளிங் எச்-20 குடிநீரானது அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுகளில் இருந்து இந்த நீர் எடுக்கப்படுகிறது. இது ஓசோன், புறஊதாக் கதிர்கள் மற்றும் மைக்ரோ பில்டரேஷன் உள்பட 9 அதிநவீன சுத்திகரிப்பு நிலைகளை கடந்து பாட்டிலில் அடைக்கப்படுகிறது. இதன் முக்கியமான சிறப்பம்சமே இதன் பேக்கிங் ஆகும். பிரத்யேகமான கண்ணாடி பாட்டில்கள் கைகளால் பதிக்கப்பட்ட அசல் சுவரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். பாலிவுட் ஹாலிவுட் பிரபலங்கள் கைகளில் இந்த குடிநீர் பாட்டில்கள் அடிக்கடி இடம் பெறுகிறது.
 

Leave a comment

Comment