TamilsGuide

இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்

2026 அக்டோபர் 26 அன்று மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கூராய் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகரித்து வரும் வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவப் படையினர் நிவாரணப் பணிகளைத் ஆரம்பித்தனர்.

அதற்கமைய, இராணுவ படையினர் 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 நபர்களை இலுப்கைகடவை அரச பாடசாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமிற்குப் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் அங்கு தங்கியிருப்பவர்களுக்குச் சமைத்த உணவையும் வழங்கியுள்ளனர்.
 

Leave a comment

Comment