TamilsGuide

ஜனாதிபதி அநுரகுமாரவின் வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்த பிரேசில் ஜனாதிபதி

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தனது அண்மைய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ள லுலா டா சில்வா, இந்த ஆண்டு பெப்ரவரியில் இந்தியாவில் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

பிரேசிலிய மக்கள் தங்கள் வெற்றியின் மூலம், தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்; 

இதனை அவர் ஒரு “பெரிய வெற்றி” என்று வர்ணித்தார்.

“எங்கள் நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இருதரப்பு வர்த்தகத்தையும் மேலும் ஆழப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்” என்று பிரேசில் ஜனாதிபதி அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டார்.

பிரேசில் ஜனாதிபதியாக நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு, ஜனாதிபதி அநுரகுமார நேற்று (26) ‘எக்ஸ்’ தளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment