TamilsGuide

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு - 11 பேர் படுகாயம்

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு கொண்டாட்டம் நடந்தது.

இதில் டாக்டர்கள், என்ஜீனியர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் கைகலப்பு பிரச்சினை, கொடூர துப்பாக்கி சண்டையாக மாறியது.

இதில் 6 சிறுவர்கள் உள்பட 11 பேர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளி தப்பியோடியதால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, மாணவர்கள் அறைகளுக்குள் முடக்கப்பட்டனர். தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 

Leave a comment

Comment