TamilsGuide

வட - தென் கொரியா எல்லையில் மீண்டும் பதற்றம் - குறிவைக்கும் வடகொரியா

வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே இந்த வாரம் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற தரைக்கண்ணி வெடி சம்பவத்தை தென்கொரிய அரசாங்கமே திட்டமிட்டு உருவாக்கியதாக வடகொரியா குற்றம்சாட்டி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அறிவித்திருந்தது.

இது தவிர இரு நாடுகளின் எல்லைப் பிராந்தியத்தில் வடகொரியாவின் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தினை செய்தி நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கண்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்கொரியாவின் எல்லைப்பகுதியை பார்வையிடும் ஒரு கண்காணிப்பு மையத்தில் இருந்து பார்த்த செய்தி நிறுவனத்தின் பிரதிநிதி மூன்று விசேட தாக்குதல் வாகனங்களை தெளிவாக இன்று பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தென்கொரியாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் இன்று மூன்று கவச பீரங்கி தாக்குதல் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், எல்லைப்பகுதியில் அவதானித்ததாக தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த பீரங்கி வாகனங்கள் தென் கொரியாவை குறிவைத்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment