இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், "நாம் தொடங்கிய வேலையை முடித்துக்காட்ட வேண்டும், எனவே நெதன்யாகுவிற்கு வாக்களியுங்கள்" எனக் கூறி அவருக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தார்.
நெதன்யாகு அதிகாரத்தில் நீடிக்கும் வரை மட்டுமே ஈரானிய அச்சுறுத்தலை முழுமையாக அகற்ற ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நெதன்யாகு, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதே இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி என்பதால், அதற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறு இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் ராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, சவாலான சூழ்நிலைகளிலும் நெதன்யாகு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக ட்ரம்ப் பாராட்டியுள்ள சூழலில், புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இஸ்ரேலில் நடைபெறுகிறது.


