Industry hit Jailer 2 Box office: ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக சாதனை படைத்துள்ள நிலையில், 11 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
2026-ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்று ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, ஹ்ரித்திக் ரோஷன், சுராஜ், வித்யா பாலன் என பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் 2 படத்திற்கு, ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க, முதல் நாளிலிருந்து வசூல் பல சாதனைகளை படைத்தது.
2.0 படம்தான் தமிழ் சினிமாவின் கடைசி இண்டஸ்ட்ரி ஹிட். இப்படம் உலகளவில் ரூ. 700 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த வசூல் சாதனையை முறியடித்து புதிய இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ஜெயிலர் 2 சாதனை படைத்துள்ளது. ஆம், ஜெயிலர் 2 திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 715 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த சமயத்தில் ஜெயிலர் 2 கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இனி வரும் நாட்களில் மீதமுள்ள ரூ. 285 கோடியை வசூல் செய்து, தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாக ஜெயிலர் சாதனை படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


