TamilsGuide

உலகிலேயே இந்த தியேட்டரில் தான் ஜெயிலர் 2 படத்தை அதிக பேர் பார்த்துள்ளார்களாம்

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம். அவர்கள் எதிர்பார்த்தது போலவே படம் வெளியாகி உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் புரட்சி செய்து வருகிறது.

அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் அதிக வசூல் செய்த படமாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் உலகிலேயே ஜெயிலர் 2 படத்தை அதிக பேர் பார்த்த திரையரங்கு எது தெரியுமா, அது சென்னை ரோகினி தியேட்டர் தான், ஆம், சென்னை ரோகினி தியேட்டரில் 2 நாட்களுக்கு முன்பு வரை இப்படத்தை 75 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

தற்போது வரை கண்டிப்பாக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த படத்தை பார்க்க கண்டிப்பாக இந்த வருடத்தில் ரோகினி தியேட்டரில் அதிகம் பேர் பார்த்த படமாக ஜெயிலர் 2 இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

Leave a comment

Comment