TamilsGuide

லவ் பைட் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் லவ் பைட் படத்தின் படபிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.

இத்திரைப்படத்தை, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படப் புகழ் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இத்திரைப்படம், ஒரு ஹாரர்-காமெடி மற்றும் சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது

லவ் பைட் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 2026-ல் பூஜையுடன் தொடங்கி, காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, விரைவில் படத்தின் டீஸர், ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பு நிறைவை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி முடித்துள்ளது. இந்த நிறைவு வீடியோவை சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
 

Leave a comment

Comment