TamilsGuide

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி தொடர் சத்தியாகிரகம் – 9ஆவது நாளாக நீடிப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் தலைமையிலான குழுவினர் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுத்துவரும் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் இன்றுடன் 9 ஆவது நாளை எட்டியுள்ளது.

கடந்த 16 ஆம் திகதியன்று விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்களால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து குறித்த பூங்கா வளாகத்திலேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பையும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment