TamilsGuide

அமெரிக்கா - கனடா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்

 கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா தங்களுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்ட தீவிரமாக உழைத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா முழுமையான பலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட கனடா அரசு நேர்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டார்.

மேலும், "அமெரிக்கா விரும்பினால் இன்றைக்கே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார்; அதேசமயம் சரியான ஒப்பந்தம் எட்டப்படும் வரை எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருக்கவும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு கனடா நாட்டு மூத்த தலைவர்கள் அரசியலில் தலையிடுவதாக ஒட்டாவாவில் உள்ள அமெரிக்கத் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஸ்டெல்கோ எஃகு ஆலை விவகாரத்தில் அமைச்சர் மெலனி ஜோலி கூறிய கருத்துகள் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவின் எஃகு மற்றும் அலுமீனியப் பொருட்கள் மீது 25 சதவீத வரியும், பின்னர் அதனை 50 சதவீதமாக உயர்த்தியும் உத்தரவிட்டார்.

இதற்குப் பதிலடியாகக் கனடாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீது 27.6 பில்லியன் டாலர் மதிப்பிலான எதிர் வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment