TamilsGuide

ஆல்பர்ட்டா வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்தோரை வருந்தச் செய்துள்ள விடயம்

Alberta welcomed migrant workers. Now, it wants to restrict their rights: ஒரு காலத்தில் புலம்பெயர் பணியாளர்களை வரவேற்ற ஆல்பர்ட்டா மாகாணம், இன்று அவர்களுடைய உரிமைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது!

சமீபத்தில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு குறித்த செய்திகள் நினைவிருக்கலாம்.

அதாவது, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருப்பதா, அல்லது தனியாக பிரிவது தொடர்பில் இன்னொரு வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது. 

ஆல்பர்ட்டா மாகாண மக்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருக்கவேண்டும் என வாக்களித்துள்ளார்கள்.

ஆக, அந்த விடயம் அதோடு முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை!

ஆம், ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருப்பதைக் குறித்தது மட்டுமல்ல!

அது, ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் தொடர்பிலானதும் கூட. சொல்லப்போனால், வாக்கெடுப்பில் கொடுக்கப்பட்ட 10 கேள்விகளில், ஒரே ஒரு கேள்விதான் ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருப்பதா பிரிவதா என்பதைக் குறித்தது.

மீதமுள்ள ஒன்பது கேள்விகளில், ஐந்து கேள்விகள், புலம்பெயர்தல் தொடர்பிலானவை.

அதாவது, புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமா, அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டுமா, புலம்பெயர்ந்தோருக்கு அரசு உதவி கிடைக்க அவர்கள் 12 மாதங்களாவது காத்திருக்கவேண்டுமா, 

புலம்பெயர்ந்தோர் மருத்துவம், கல்வி போன்ற விடயங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு கட்டணம் விதிக்கலாமா, தேர்தலில் அவர்கள் வாக்களிக்க கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என ஐந்து கேள்விகள் ஆல்பர்ட்டா மாகாண மக்களிடம் கேட்கப்பட்டன.

விடயம் என்னவென்றால், அந்த ஐந்து கேள்விகளுக்குமே, ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள், அதாவது, பெரும்பாலானவர்கள், ஆம் என்றுதான் பதிலளித்துள்ளார்கள்!

ஆக, ஒரு காலத்தில் தங்களை வரவேற்ற ஆல்பர்ட்டா மாகாணம், இன்று தங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புகிறது என்கிறார்கள் அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர்.

Leave a comment

Comment