TamilsGuide

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை - அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அவர்களால் பதிலளிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

இதற்கு பதில்கள் இல்லாமல் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை எங்ஙனம் நிகழ்த்தப்போகிறீர்கள்.

வரவு செலவுத் திட்ட முன்னேற்றங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால்தானே அதன் முன்னேற்றத்தை மறைத்து வருகிறீர்கள். இன்னும் 3 வாரங்களில் 2027 வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இந்த கேள்விகளுக்கு கடந்த 6 மாதங்களாக பதில் தர முடியாமல் தானே போயுள்ளது.இந்த ஆட்சியின் காரணமாக நாடு ஆபத்தான மட்டத்தில் காணப்படுகின்றது.

சிறந்த ஆட்சியை இவர்களால் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 

Leave a comment

Comment