TamilsGuide

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம் - அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியேற உத்தரவு

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா மாத்திரமன்றி, ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் உடனடியாக வெளியேறுமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யேமன் ஆதரவு ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Comment