TamilsGuide

இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரத்தில் செய்துள்ள வசூல் விவரம்

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் ஜெயிலர் 2 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

இப்படம் தமிழகம் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் 2 இலங்கையில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இலங்கை பொறுத்தவரை எப்போதும் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்; அதிலும் ரஜினி, விஜய் படங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், தற்போது இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரம் ஓடிய நிலையில் இந்திய மதிப்பில் ரூ. 5.5 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மேலும், இப்படம் இலங்கையில் இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஜய்யின் கோட் ரூ. 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment