TamilsGuide

ஒரு நடிகருக்கு 130 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை 

ஒரு நடிகருக்கு ஜோடியாக 5 படங்கள் நடிக்கலாம், 10 படங்கள் நடிக்கலாம், ஏன் சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் 20, 30 படங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நடிகருக்கு 130 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை குறித்து இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 

அவர் தான் பிரபல மலையாள நடிகை ஷீலா.

நடிகை ஷீலா, பிரேம் நசீருடன் 130 படங்களில் நடித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகில் எந்த நடிகரும் நடிகையும் இத்தனை படங்களில் இணைந்து நடித்ததில்லை என்பதும், இனிமேல் இப்படி ஒரு சாதனையை எந்த நடிகையும் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment