TamilsGuide

பொரளையில் வீதி மூடல் - சாரதிகளுக்கு அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொடல் ஃபாம் சந்தியிலிருந்து டி.எஸ். சந்தி நோக்கிக் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் பாதையில், டி.எஸ். சேனாநாயக்க மாவத்தையில், டி.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நிலத்தடி நீர்க்குழாய்களில் அவசரத் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது வீதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, குறித்த வீதியில் கொழும்பு நோக்கிப் பிரவேசிக்கும் பாதையில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடாளுமன்ற வீதி, காஸில் வீதி மற்றும் மொடல் ஃபாம் வழியாக டி.எஸ். சேனாநாயக்க மாவத்தை ஊடாகக் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகன சாரதிகளும் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாற்று வீதிகள்

    மொடல் ஃபாம் சந்தியில் திரும்பி, பழைய புல்லர்ஸ் வீதி ஊடாக கனத்தை (மயானம்) சுற்றுவட்டம் வழியாகப் பயணிக்கலாம்.
    மேலும், ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கொட்டா வீதிக்குள் பிரவேசித்து, பொரளை சந்தி வழியாகப் பயணிக்கலாம்.

Leave a comment

Comment