திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் திருகோணமலை, சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபராவார்.
கொல்லப்பட்ட நபர் விடுதியில் தனியாக இருந்தவேளையில், அடையாளம் தெரியாத நபரோ அல்லது குழுவினரோ இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


