TamilsGuide

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை

நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியமான காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரின் பொறுப்புகளும் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கும்,

அந்த யானைக்காக நீதியை நிலைநாட்டுவதற்கும் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை கையளிப்பதற்கு எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதன் பிரகாரம், குறித்த இந்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினது பங்கேற்புடன் இடம்பெற்றது.
 

Leave a comment

Comment