TamilsGuide

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000 சாரதி அனுமதிப் பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார இதுனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் பதிவு நிலையங்களை நிறுவ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது நிலையம் கம்பஹாவில் திறக்கப்பட்டுள்ளது.

குருணால்கல், அனுராதபுரம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இத்தகைய நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாகனப் பதிவுச் சேவை, பிற்காலத்தில் ஏனைய வாகன வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் துஷார இதுனில் பெர்னாண்டோ குறிப்பிட்டார். 

மேலும், வாகன இலக்கத் தகடுகளின் தரநிலைகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment