TamilsGuide

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் – 2025-2029 – இன் கீழ் நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்குத் தலைமை தாங்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தக் குழுவிற்கு, குழுக்களின் துணைத் தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமை தாங்குவார்.

குழு உறுப்பினர்கள் விபரம்:

ஹர்ஷன நாணயக்கார

சுனில் வதகல

கௌசல்யா ஆரியரத்ன

ஜே.சி.அலவத்துவல

அனுராதா ஜயரத்ன

இராசமாணிக்கம் சாணக்கியன்

பிரகீத் மதுரங்க

தர்மபிரியா விஜேசிங்க

தேவானந்த சுரவீர

சந்திம ஹெட்டியாராட்சி

எம்.நிசாம் காரியப்பர்
 

Leave a comment

Comment