இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்.
இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி தந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தங்களான் படத்தில் இவருடைய மிரட்டலான நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த சர்தார் 2 எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் 4.6 மில்லியன் ஃபாலோயர்களை (Followers) கொண்டுள்ள மாளவிகா மோகனன், அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிடும் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது நவராத்திரி ஸ்பெஷலாக சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை மாளவிகா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


