TamilsGuide

அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு

கண்டி, அகுரணை குருகோடா பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு இடம்பெற்ற விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

குருகோடா சந்திக்கு அருகில், சீமெந்து ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக அகுரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment