Jailer 2 Box office: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும்போதெல்லாம், அப்படத்தின் வசூல் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
அந்த வகையில், கடந்த வாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் ஜெயிலர் 2-வின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
முதல் நாளே இப்படம் உலகளவில் ரூ. 130 கோடி வசூல் செய்தது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 425 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கண்டிப்பாக நம்பர் 1 இடத்தை ஜெயிலர் 2 பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


