TamilsGuide

இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன்

இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் கன்னிப் பயணம் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு போர்ட் சிட்டியில்  இடம்பெறவுள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இருவர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன், சுமார் 30 நிமிடங்கள் வரை வானில் பறக்கும் திறன் கொண்டதாகும். சீனாவின் ‘EHang’ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) விமானங்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டுவரும் "Global Fast Track" திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக இலங்கை இணைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், கொழும்பு போர்ட் சிட்டி இதன் ஆரம்பச் செயல்பாட்டு மையமாகச் செயற்படும். எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லல், சீகிரியா மற்றும் பிதுரங்கல பகுதிகளில் இயற்கை அழகை ரசிக்கும் வான்வழிச் சுற்றுலாக்களை முன்னெடுத்தல் மற்றும் கடல்சார் தளவாடப் போக்குவரத்து (Maritime Logistics) ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
 

Leave a comment

Comment