"நீரும் நெருப்பும்" புரட்சி நடிகர் இரட்டை வேட நடிப்பில் ஜொலித்த படம். 1971 அக் 18 இதே நாளில் வெளியாகி வெற்றி பெற்ற படம். நடிப்பில் மக்கள் திலகம் தனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று காட்டிய படம். ஒரு மாபெரும் வெற்றிப்படமான "ரிக்ஷாக்காரனை" தொடர்ந்து வந்த வெற்றிப் படம். ஒரு சிலர் "ரிக்ஷாக்காரன்" அளவு வெற்றி பெறவில்லையே என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். யானை அமர்ந்தாலும் குதிரையை விட உயரம் கூடுதலாக காட்சியளிப்பதை மறந்து விட்டார்கள்.்
"நீரும் நெருப்பும்" கூட வந்த பாபு(பூ) வை வசூலில் ஊதித்தள்ளியதுடன், சொந்த மண்ணில் வெற்றி பெற முடியாமல் அந்நியமண்ணை நம்பி அலைகடலில் தள்ளாடிய தோணியை "நம்நாட்டி"ல் மலர்ந்த மணிவண்ணன் சகோதரர்கள் ஆழ்கடலில் மூழ்க வைத்த அபூர்வ சாதனையை நாம் காணலாம். அந்நிய நாடான இலங்கையிலும் 91 நாட்களுக்கு மேல் ஓடி மகத்தான சாதனை செய்த படம்தான் "நீரும் நெருப்பும்". தமிழகத்தில் திரையிட்ட 22 திரையரங்குகளில் 50 நாட்களும்
அதற்கு மேலும் ஓடி வெற்றி பெற்றது.
ஆனால் பாபுவை வெறும் 8 திரையரங்கில் மட்டுமே 50 நாட்கள் ஓட்ட முடிந்தது.
நெல்லையில் ஒரே திரையரங்கில் வெளியான "சிவந்த மண்ணை" சிதைத்த மணிவண்ணன் கரிகாலன் என்ற "அபூர்வ சகோதரர்க"ளின் எழில் மிகு சாதனை. அந்நியமண்ணை நம்பியிருந்த அய்யனின் கைஸ்கள் பதறி "பாபு"விடம் வந்தால் ஈனஸ்வரத்தில் முனகிய "பாபு"வை
அவசர சிகிச்சையில் சேர்த்தும் பலனின்றி பரலோகம்சென்ற கதையை மறைத்து "பாபு"வுக்கு பில்ட்அப் கொடுக்கும் கைஸ்களின் நிலை பரிதாபத்துக்குரியதே.
இலங்கையிலும் "நீரும் நெருப்பும்" மொத்தம் 136 நாட்கள் ஓடியது.
மதுரையில் "பாபு"வை பூ என ஊதித் தள்ளிய "நீரும் நெருப்பும்" சென்னையில் ரூ 8 லட்சத்தை தாண்டி வசூல் செய்த படம். 100 நாட்கள் ஓட்டிய "பாபு" 8 லட்சத்தை கூட தொட முடியாமல் அடிபணிந்ததை மறைத்து ரூ 10 லட்சம் வந்ததாக சப்பை கட்டு கட்டுகின்றனர். "சிவந்தமண்" வசூலை ஊர்ஊருக்கு பந்தாடிய வெற்றிப்படமாக "நீரும் நெருப்பும்" ஜொலித்தது. "நீரும் நெருப்பும்" தோல்வி படமென்றால் அய்யனின் அனைத்து படங்களுமே படுதோல்விப் படங்கள்தான்.
மதுரை சென்ட்ரல் "நீரும் நெருப்பும்"
84 நாட்கள் வசூல் ரூ 239171.09
மதுரை சென்ட்ரலில் 28 நாள் வசூல்
ரூ. 135219.80
மதுரை தேவி "பாபு" 89 நாட்கள் வசூல்
ரூ 189491.55
நீரும் நெருப்பும்
--------------------------
நெல்லை சென்ட்ரல் 50. 127805.50
திண்டுக்கல் 50. 97301.49
சிவந்த மண்
---------------------
நெல்லை சென்ட்ரல் 50 நாட்கள் வசூல். ரூ 116134.60
திண்டுக்கல். 50. ரூ. 72679.49
நீரும் நெருப்பும்
--------------------------
சென்னை தேவி பார 67 416715.90
ஸ்ரீகிருஷ். 67 265278.45
மேகலா. 53 187112.65
------------------
869107.00
ஆனால் "பாபு"வின் உண்மையான வசூலை வெளியிடவில்லை. சென்னையில் "பாபு"வின் மொத்த வசூல் ரூ 8 லட்சம் கூட தொடவில்லை. அதுவும் சாந்தியில் "பாபு"வை 100 நாட்கள் ஓட்டத்தான் முடிந்தது. வசூல் "நீரும் நெருப்பும்" தேவிபாரடைஸில் பெற்றதை காட்டிலும் மிகக்குறைவு என்பதால் பட்டறை வசூலை கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவரின் சாதாரண படங்களையே சந்திக்க முடியாமல் திணறும் கைஸ்களால், தலைவரின் சாதனை படங்களை எப்படி எதிர்கொள்ள முடியும்? என்பதால் பொய் வசூலை பொய் பிரசாரம் செய்து முன் வைக்கிறார்கள். அவர்கள் அய்யன் பாடிய நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? என்ற பாடல்தான் நினைவுக்கு


