மின் தடை குறித்து விரிவான விசாரணை
இலங்கை
நாடு தழுவிய ரீதியில் நேற்று (17) திடீரென ஏற்பட்ட மின் தடை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (NSO) அறிவித்துள்ளது.
விசாரணை அறிக்கை ஒரு மாதத்திற்குள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடமும் (PUCSL) சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடமும் சமர்ப்பிக்கப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன குறிப்பிட்டார். தீவுகள்ஆராயுங்கள்
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை இந்த அறிக்கை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.





















