TamilsGuide

பரிசாகக் கிடைத்த குதிரை கின்னஸ் உலக சாதனை

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த'ஜென்னி' (Jenny) என்ற பெண் குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

இந்த குதிரையின் உரிமையாளரான மெக்கன்சிக்கு கடந்த 2019-ம் ஆண்டில் அவரது 13-வது பிறந்தநாளின் போது பரிசாகக் கிடைத்த குதிரை இதுவாகும்.

கடந்த ஜூலை 25 அன்று கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் அளவிடப்பட்ட போது, ஜென்னி குதிரையின் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீற்றர்) நீளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது சராசரி மனிதனின் உயரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வாலின் நீளம் குறையாமலும், சேதமடையாமலும் இருக்க கடந்த 7 ஆண்டுகளாக வாரத்திற்கு இரண்டு முறை அதனைத் தனித்துவமாகக் கழுவி, பின்னலிட்டு, சிறப்புப் பைகளில் வைத்து உரிமையாளர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.

இதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டு 'ஜேடி' (JT) என்ற குதிரை 12 அடி 6 அங்குல வாலுடன் படைத்திருந்த சாதனையை ஜென்னி குதிரை தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment