TamilsGuide

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு- மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளரான தேவா உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

தென்னிந்திய திரையுலகில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தேவா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் நுங்கம்பாக்கம் தருமபுரம் பத்மநாபா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து தேவா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேவா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் தேவாவின் மகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலினுடன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன இருந்தனர்.

தேவாவின் உடலுக்கு நாளை மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
 

Leave a comment

Comment