Alberta’s Smith casts vote to stay in Canada: ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித், மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரியும் விவகாரம் தொடர்பில், திங்கட்கிழமையன்று, அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த வாக்கெடுப்பில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை 13ஆம் திகதியே துவங்கியுள்ளது.
இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை, 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், வாக்கெடுப்பு துவங்கிய முதல் நாளிலேயே 174,530க்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
இதற்கிடையில், ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித், மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பில் தான் வாக்களித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருக்கவேண்டும் என தான் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்மித், ஆல்பர்ட்டா மக்களும் தன்னைப்போலவே ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இருக்கவேண்டும் என வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவரான நஹீத் நேன்ஷியும், தானும் வாக்களித்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், ஆல்பர்ட்டா மக்களும், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருக்கவேண்டும் என வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


