TamilsGuide

முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... 

ரஜினி என்றாலே எப்போதுமே ஒரு கிரேஸ் தமிழக மக்களிடம் இருக்கும் அதிகம் இருக்கும்.

எங்களது தலைவர் என பெருமையாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள், தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் ரஜினிக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இன்று அக்டோபர் 15, ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த நாள்.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை முதல் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எப்போதுமே பெரிய நடிகரின் படம் வெளியானால் மற்ற முன்னணி நடிகரின் பட வசூலுடன் ஒப்பிடப்படும். அது வழக்கமாக தமிழ் சினிமாவில் நடந்து வரும் விஷயம்.

தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியான நிலையில் இப்பட ப்ரீ கலெக்ஷன் மற்றும் விஜய்யின் ஜனநாயகன் பட வசூல் ஒப்பிடப்பட்டு வருகிறது. பல பிரச்சனைகளை தாண்டி வெளியான ஜனநாயகன் படம் முதல் நாளில் ரூ. 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் ஜெயிலர் 2 ப்ரீ கலெக்ஷனிலேயே ரூ. 78 கோடி வசூலித்து விஜய்யின் ஜனநாயகன் படத்தை முந்தியுள்ளது.
 

Leave a comment

Comment