Prince William and Kate Middleton are travelling to India for the sixth Earthshot Prize ceremony: இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக இந்தியா செல்ல இருக்கிறார்கள்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம், தன் மனைவியான கேட் மிடில்டனுடன் இந்தியா செல்ல இருக்கிறார்.
அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம், இந்தியாவில் Earthshot விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, வில்லியம் கேட் தம்பதியர் இந்தியா செல்ல உள்ளனர்.
இந்தியாவின் மும்பை நகரில், நவம்பர் மாதம் 17ஆம் திகதி அந்த விழா நடைபெற உள்ளது.
விடயம் என்னவென்றால், இளவரசி கேட் இந்தியா செல்வது குறித்து இன்னமும் பக்கிங்காம் மாளிகை உறுதி செய்யவில்லை.
அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நலமடைந்தபின் தன் கணவருடன் இணைந்து இதுவரை எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை.
ஆகவே, அப்படி அவர் இந்தியா செல்வாரானால் அது அவர் உடல் நலமடைந்தபின் தன் கணவருடன் இணைந்து பயணிக்கும் முதல் பயணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


