TamilsGuide

இலங்கை இளைஞர் அனோஜனுக்கு நிம்மதி – மரண தண்டனைத் தீர்ப்பு இரத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். தீவுகள்ஆராயுங்கள்

தனது முகநூல் பதிவின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கடந்த 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தீவுகள்ஆராயுங்கள்

இதேவேளை, இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment