TamilsGuide

போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சையில் புற்றுநோய் கட்டி அகற்றம்

போப் லியோ XIV-இன் வலது நுரையீரலில் இருந்த புற்றுநோய் கட்டி, நேற்று (செவ்வாய்) நடந்த 90 நிமிட அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் "சாதாரணமாக கண்விழித்தார்" என்றும் வேட்டிகன் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பரவியுள்ளதா என்பதை கண்டறிய மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேட்டிக்கன் வட்டாரம் தெரிவித்துள்ளது.

"இந்த அறுவை சிகிச்சை முழுமையானது என்பதை உறுதி செய்வதற்காக, வலது நுரையீரலின் கீழ் மடல் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய சோதனைகளில் சந்தேகிக்கப்பட்டபடி, நுரையீரல் அடினோகார்சினோமா நோயறிதலை இந்த அறுவை சிகிச்சை உறுதிப்படுத்தியது," என்று வேட்டிக்கன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போப் அறுவை சிகிச்சை அறையில் மொத்தம் மூன்று மணி நேரம் இருந்தார், அதில் பாதி நேரமே அறுவை சிகிச்சை நீடித்தது.

"அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, மேலும் எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை," என வேட்டிக்கன் தெரிவித்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் இரவு உணவு கேட்டதாக வேட்டிக்கன் வட்டாரம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை அன்று, அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, லியோ சிரித்துக்கொண்டே கையசைத்தபடி மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தார்.

போப் குணமடைவதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையின் 10-ஆவது மாடியில் உள்ள தனது அறையில் சில நாட்கள் தங்கியிருப்பார் என எதிர்பார்ப்பதாக வேட்டிக்கன் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 20 வரை அவரின் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறுவை சிகிச்சை, அடுத்த மாதம் போப் லத்தீன் அமெரிக்காவிற்கு நீண்ட பயணம் மேற்கொள்வாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

71 வயதான லியோ, மே 8, 2025 அன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஞாயிற்றுக்கிழமை ஏஞ்சலஸ் பிரார்த்தனையை தொடர்ந்து, புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடம் லியோ ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். மருத்துவ பரிசோதனைகளின் போது மருத்துவர்கள் ஒரு கட்டியை "மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே" கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
 

Leave a comment

Comment