TamilsGuide

பகை நாடுடன் உறவு - பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை

தாய்வானுடன் தூதரக உறவுகளைத் தொடர்ந்து பேணி வருவதன் காரணமாக, பராகுவே மற்றும் பெலீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு உயர்மட்ட அதிகாரிகள் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதன்படி, பராகுவேயின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் குஸ்தாவோ வில் லேட் மற்றும் பெலீஸின் வெளியுறவு அமைச்சர் பிரான்சிஸ் பொன்சேகா ஆகியோருக்குச் சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகளவில் தாய்வானுடன் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணி வரும் 12 நாடுகளில் பராகுவே மற்றும் பெலீஸ் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment