TamilsGuide

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள கனேடியர் - அதிர்ச்சிப் பின்னணி

Shock after FBI arrests Canadian cybersecurity expert: கனேடிய சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் FBIயால் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனேடிய சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் நிகழ்ந்த சைபர் தாக்குதல் ஒன்று தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக FBI இயக்குநரான காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர், கனேடியரான எட் டுப்ரோவ்ஸ்கி (Ed Dubrovsky) என ராய்ச்சர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எட், பிரபல ஹேக்கர்கள் ஒருவரைக் குறித்த தகவல்களைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, பணம் கொடுக்கவில்லை என்றால் அவற்றை வெளியிட்டுவிடுவதாக மிரட்டும்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆவார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரல ஹேக்கர் அமைப்பு ஒன்றுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக எட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் பறிக்கும் நோக்கில் FBI ஊழியர்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியது முதலான குற்றச்சாட்டுகள் எட் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

பிரபல சைபர் பாதுகாப்பு நிபுணர், ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர் என அறியப்பட்ட ஒருவரே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கனேடியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

Leave a comment

Comment