கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் வணிக வளாகத்தில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின்போது 1 கிலோ கிராம் 49 கிராம் கொக்கெய்னைப் பறிமுதல் செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அந்த நால்வரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்களின் வயது முறையே 23 மற்றும் 48 ஆகவும், பெண்களின் வயது 43 மற்றும் 52 ஆகவும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


