TamilsGuide

தங்களது திருமணக் காலகட்டத்தை நினைவுகூர்ந்த சுஹாசினி...

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் மணிரத்னமும், நடிகை சுஹாசினியும் திரைத்துறையில் வெற்றிகரமான தம்பதியராகத் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது திருமணக் காலகட்டத்தை நினைவுகூர்ந்த சுஹாசினி, அப்போது மணிரத்னத்தை விடத் தானே அதிக வெற்றிகளைப் பெற்றிருந்ததாக நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

1988-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். பல ஆண்டுகளாகத் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் இவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கையின் தொடக்க நாட்களைப் பற்றிப் பேசிய சுஹாசினி, அப்போது இருவருக்கும் இடையே இருந்த தொழில்முறை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பேசினார்.

அவர் கூறுகையில், “எங்களுக்குத் திருமணம் நடந்தபோது நான் கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்திருந்தேன். ஆனால், மணிரத்னம் அப்போது 5 அல்லது 6 படங்களைத்தான் இயக்கியிருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 15,000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதனால், எங்கள் திருமணத்தின் போது அவரைவிட நான்தான் அதிக வெற்றியடைந்த நபராக இருந்தேன்” என்று சிரித்தபடியே தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment