TamilsGuide

இந்திய மேடையின் ராணி

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் நடிகை மற்றும் பாடகி  "இந்திய மேடையின் ராணி" 

இந்தியாவில் ஒரு மாநில சட்டமன்றத்தில் நுழைந்த முதல் திரைப்பட ஆளுமை ..

எம்ஜிஆரும் சிவாஜியும் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், எம்ஜிஆரே வாங்காத சம்பளமான ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றவர்...

காந்திஜி, ஈரோட்டுப் பக்கம் வந்த தருணத்தில், இவரின் வீட்டில்தான் உணவருந்தினார். அப்போது, ‘சாப்பாடு மட்டும்தானா. இந்தத் தட்டு எங்களுக்குத்தானே’ என்றார். ‘தாராளமா எடுத்துக்கோங்க’ என்றார். அது தங்கத்தட்டு. காந்திஜி, அந்தத் தட்டை ஏலம் விட்டார். ஏலத்தில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்டத்துக்கும் மக்களுக்குமாகப் பயன்படுத்த நிதியில் சேர்த்தார் காந்திஜி.

சுந்தராம்பாள், தன் குரல்வளத்தால் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறார். மரியாதையையும் கவுரவத்தையும் அடைந்திருக்கிறார். அவரால் நமக்குக் கிடைத்தது... அற்புதமான, அழகான, கணீர்ப் பாடல்கள்..


Prashantha Kumar

Leave a comment

Comment