பிரித்தானியாவின் யோர்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலியின் கூண்டுக்குள் நுழைந்த ஒருவர், புலியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டான்காஸ்டர் நகருக்கு அருகிலுள்ள குறித்த பூங்காவில், ஒருவர் புலியின் கூண்டுக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் கிடைத்ததாக தெற்கு யோர்க்ஷயர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
புலியின் தாக்குதலுக்கு இலக்கானவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பூங்காவுக்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், பூங்காவும் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது புலிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அது பாதுகாப்பாகத் தனது கூண்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


