TamilsGuide

கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு

கொழும்பு – கண்டி போன்ற குறுகிய தூரப் பேருந்து வழித்தடங்களில், தேநீர் இடைவேளைகளுக்காகச் செய்யப்படும் தேவையற்ற நிறுத்தங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். 

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பயணத் தூரம் மற்றும் சேருமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில், நீண்ட தூரப் பயணங்களின்போது சாரதிகளின் சோர்வைக் குறைக்கவும் விபத்து அபாயத்தைத் தவிர்க்கவும் இடைவேளைகள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்துச் சபை எதிர்பார்க்கிறது.
 

Leave a comment

Comment