TamilsGuide

சிறையில் இருக்கும் ஷிரந்திக்கு சிறப்பு அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சிரிலிய சவிய நிதிய மோசடி தொடர்பில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கான உணவினை வீட்டில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி வீட்டில் இருந்து உணவினைப் பெற்றுக் கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. 
 

Leave a comment

Comment