இன்று (9) காலை களுத்துறை, நாகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மனைவி காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


