TamilsGuide

எலான் மஸ்க் நவீனகால எடிசன்.. உயரிய பதக்கம் வழங்கி கௌரவித்த டிரம்ப்.. சத்யா நாதெல்லாவுக்கும் பதக்கம் 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள 'US Institute of Peace' கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற “A New Golden Age submmit” நிகழ்வில் இந்த பதக்கங்களை டிரம்ப் வழங்கியுள்ளார்.

இந்த தேசிய நிறுவனம் 'Donald J. Trump Institute of Peace' என டிரம்ப் அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு வைத்து நேற்று நடைபெற்ற அந்த நிகழ்வில் உலக பெரும்பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க், எக்ஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரருமான எலான் மஸ்க்குக்கு 'நேஷனல் மெடல் ஆப் சைன்ஸ்' பதக்கத்தை டிரம்ப் வழங்கினார்.

இதன்போது எலான் மஸ்க், 'நவீனகால தாமஸ் எடிசன்' என்றும் 'டைட்டன்' என்றும் 'ஜீனியஸ்' என்றும் 'தேசிய பொக்கிஷம்' என்றும் அவரை போல வேறு யாரும் இல்லை என்றும் டிரம்ப் பாராட்டினார்.

விண்வெளி தொழில்நுட்பம், சாட்டிலைட் தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளில் மஸ்க்கின் பங்களிப்பை அவர் மெச்சினார்.

மஸ்க்கை தவிர்த்து கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைசஸ் சிஇஓ லிசா சு ஆகியிருக்கும் நேஷனல் மெடல் ஆப் சைன்ஸ் பதக்கங்களை டிரம்ப் வழங்கினார்.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, டெல் டெக்னாலஜி சிஇஓ மைக்கல் டெல் ஆகியோருக்கு 'நேஷனல் மெடல் ஆப் டெக்னலாஜி அண்ட் இனோவேஷன்' பதக்கத்தை டிரம்ப் வழங்கினார்.

இந்த 6 தொழில்நுட்ப தலைவர்களும் தேசிய பொக்கிஷங்கள் எனவும் இந்த நிகழ்வு அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமானது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏஐ ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. டிரம்ப் தொடர்ந்து ஏஐ வளர்ச்சியை முன்னிறுத்தி வருகிறார். ஆனால் அதில் உள்ள ஆபத்துகள் குறித்து ஏஐ நிறுவன தலைவர்களே கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு கிரீன் கார்ட் வழங்குவதை டிரம்ப் நிர்வாகம் தடை செய்துள்ளது.

Leave a comment

Comment