TamilsGuide

பாராசூட் உதவியுடன் கடலில் தரையிறங்கிய விண்கலம்.. 8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய 4 விண்வெளி வீரா்கள்

நாசா விண்வெளி வீரர்கள் ஜெசிகா மீர், ஜேக் ஹாதவே, ஐரோப்ப விண்வெளி நிறுவன வீரர்க சோபி அடேனட், ரோஸ்காஸ்மாஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெதியாவ் ஆகியோர் நேற்று முன் தினம் (அக்டோபர் 7) அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்களின் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து, கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் இன்று இரவு தரையிறங்கியது.

27 மணிநேர பயணத்தின் பின் பூமியின் வளிமண்டலத்துக்குள் அதிவேகமாக நுழைந்த விண்கலம் அதன்பின் வேகத்தை குறைத்து பாராசூட் உதவியடன் பசிபிக்கில் தரையிறங்கியது. வீரர்கள் தரையிறங்கிய பிரமிப்பூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 13 அன்று இந்த குழு ஸ்பேஸ் எக்ஸ் உடைய பால்கன் விண்கலம் மூலம் புளோரிடாவின் கேப் கானாவேரலில் இருந்து விண்வெளிக்கு சென்றது.

நாசாவின் கமெர்ஷியல் கிரியூ புரோக்ராம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 12வது குழு இதுவாகும். அவர்கள் சுமார் 8 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழித்துள்ளனர்.

அங்குள்ள ஆர்பிட்டால் ஆய்வகத்தில் பலதரப்பட்ட அறிவியல் ஆய்வுகளையும், ஒத்திகைகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

மைக்ரோகிராவிட்டியில் மனித உடல்நலம் எப்படி இருக்கிறது, விண்வெளியில் உலக தயாரிப்பை எப்படி மேம்படுத்துவது, வருங்கால விண்வெளி மிஷன்களுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, பூமியில் உள்ள மனிதர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் அங்குள்ள பயோலாஜிக்கல் நிலைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் வீரர்கள் இந்த 8 மாதங்களும் ஈடுபட்டிருந்தனர்.
 

Leave a comment

Comment